Romance தூய்மை காதல்
#1
அன்று நாள் வெள்ளிக்கிழமை, கோடை மழை கொட்ட துவங்கும் ஒரு அழகிய மாலை பொழுது. ஆதவன் மேற்கே மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருந்தான்.


நான் பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கும் அவேளயில், வானொலி பண்ணலை 92.7ல் 

அவள ஒரு படத்தின் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது!

கதிரவன் மறையவும், கார்மேகம் சூழவும் சரியாக இருந்தது. சட்டென்று மாறிய வானிலைக்கு ஏற்றார் போல் பாடல்கள் இருந்தன, “நீயும் நானும் அன்பே.. கண்கள் கோர்த்துக்கொண்டுவாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்”, அருமையாக இருந்தது.

நீண்ட காலம் தனியாக தவித்த நானே ஒரு கணம், காதலிக்காக ஏங்கிவிட்டேன்! அந்த உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன் ?

பேருந்து வந்தது. வழக்கத்தை விட சற்று அதிக கூட்டமே. முன்னே ஏறி ஒரு பிடிமானமான இடத்தில நின்றுகொண்டேன். நடத்துனர் சீட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.

நான் சீட்டுக்கு தேவையான சரியான சில்லறையை அலசிக் கொண்டிருந்தேன். கூட்ட நெரிசல் காரணமாக நடத்துனர் என் சில்லறையை மற்றவர்களிடம் கொடுத்து சீட்டு வாங்கிக் கொள்ளச் சொன்னார்.

நான் என் அருகில் இருக்கும் பெண்மணியிடம் என் சில்லறையை கொடுத்து சீட்டை வாங்கிக் கொள்ள
முயன்று அவள் கண்களைப் பார்க்கும் அத்தருணம், வானொலியில் ஒலித்த

“விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற வேலையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்” என்ற பாடல் வரிகள் என் எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தது ?



அவள் கண்களை பார்த்து வாயடைத்து போனேன் கண்மை போடாமல் இருந்தாலும் அவள் கண் இமை கருகரு என இருந்தது அவள் முகம் பெளர்ணமி நிலவு போல் இருந்தது.
 அவள் பேசும்போது உதட்டில் புண்ணகை நிலவியது.பின்பு ஒரு மெல்லிய குரலில் “நீங்கள் எங்கே போகவேண்டும்?” என்று அவளே என்னை பார்த்து கேட்டாள் ?

அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த நான் ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

“ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, என் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து மண்ணிற்கு கொண்டு வந்தேன்!

பின்பு நான் இறங்கும் இடத்தை சொல்லி அவளிடம் என் சீட்டை வாங்கச்சொன்னேன். ஒரு சிறு புன்னகையுடன் என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாள் ?

பேருந்தில் இருக்கும் 20 நபர்களின் கைமாறி என் சீட்டு அவள் கை வழியே என் கைக்கு சேரும் அந்த இரண்டு நிமிட இடைவேளையில், ஒரு 200 முறையாவது கண்டிருப்பேன் அவள் கண்களை ?

கூட்ட நெரிசலில் சிக்கிய என் கைபேசி ஒலித்துக் கொண்டிருந்த பண்பலை தானாகவே மாற்றியது. இப்பொழுது வானொலியில் “என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை, சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை” இசைஞானியின் பாடல் ஒலித்தது ?

ஒரு இருபது நிமிடம் என்னை சுற்றி நடந்த அனைத்தையும் என் சுயநினைவுடன் மறந்தேன், அவளின் கண்களையும் அதன் அசைவுகளையும் தவிர, அவளின் கண்களில் ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருப்பதாக நான் உணர்ந்தேன் ?

நான் அவளை இப்பேருந்தில் கண்டது இதுவே முதல் முறை எனினும் இதுவே கடைசியாக இருக்கக் கூடாது என்று நான் என்னை அறியாமல் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டேன்.

அதற்குள்ளாக நான் இறங்கும் இடம் வந்தது!

பிரிய மனம் இல்லாததால், நான் மட்டும் இறங்கி, என் மனதை அவளுடனே அனுப்பினேன், அவளின் வழித்துணைக்காக அல்ல, அவளின் விழித்துணைக்காக?

காத்திருந்த கோடை கார்மேகம் கொட்டித் தீர்த்த மழையுடன் அவளின் எண்ணங்களையும் என்னுள்ளே கரைத்துக் கொண்டிருந்தேன் இரவு முழுவதும், நாளையும் அவள் வருவாள் என்ற நம்பிக்கையுடன்✌️

அவள் வருவாளா ?

காத்திருத்தல் காதலின் சிறப்பம்சம் அல்லவா ? காத்திருப்போம் ?

வருவாள் என்ற நம்பிக்கையுடன் !
[+] 1 user Likes Mirchinaveen's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
11 வது காப்பி பேஸ்ட்.

தங்களுக்கு கிடைக்கும் ஒய்வு நேரங்களில் கஷ்டபட்டு கதை எழுதும் எழுத்தாளர்களுக்கு "நடு விரலை" காட்டும் இந்த காப்பி பேஸ்ட் பையனுக்கு உங்கள் வாழ்த்தை சொல்லுங்கள்...
Like Reply
#3
(01-05-2024, 01:57 PM)FantasyX Wrote: 11 வது காப்பி பேஸ்ட்.

தங்களுக்கு கிடைக்கும் ஒய்வு நேரங்களில் கஷ்டபட்டு கதை எழுதும் எழுத்தாளர்களுக்கு "நடு விரலை" காட்டும் இந்த காப்பி பேஸ்ட் பையனுக்கு உங்கள் வாழ்த்தை சொல்லுங்கள்...

Indha story vera endha site la irukku bro konjam link send Pannunga please
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)